'காலா' படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'காலா' என்பதை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படத்தின் இரண்டு கலக்கலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜீப் மீது உட்கார்ந்திருக்கும் கலக்கலான போஸ்டரில் மும்பையின் அடித்தட்டு மக்கள் வாழும் இடத்தின் பின்னணி உள்ளது. மேலும் இரண்டாவது போஸ்டரில் முகத்தில் ரத்தத்துளிகளுடன் ரஜினிகாந்த் ஆக்ரோஷமான பார்வையுடன் உள்ளார். இந்த இரண்டு போஸ்டர்களும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். முரளிகோபி ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், என்.ராமலிங்கம் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.