ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி வி.எம்.சுதாகர் அவர்கள் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவரை இன்று நீக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது யாதெனில் நமது மன்றகட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சைதை G.ரவியை மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்குகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இனி வரும் காலங்களில் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதையும் மீறி யாராவது அவருடன் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொண்டு, மற்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை தொலைக்காட்சி பேட்டி மற்றும் பொது விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ரஜினி அவர்கள் ரசிகர்கள் சந்திப்பின்போது, 'நான் அரசியலுக்கு வரும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்களை தவிர்த்துவிடுவேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments