மலேசிய சுற்றுலா தூதர் பதவி உண்மையா? ரஜினி விளக்கம்
- IndiaGlitz, [Friday,March 31 2017]
மலேசிய அதிபர் நஜீப் ரசாக் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கபாலி' படப்பிடிப்புக்காக மலேசியாவில் 2 மாதங்கள் இருந்தேன். அரசாங்கத்தின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க அணுகியபோது, அங்கு அனைவருமே பிஸியாக இருந்ததால் சந்திக்க இயலவில்லை.
மலேசிய பிரதமர் சென்னை வருகிறார் என்று தெரிந்தவுடன், அவரை எனது இல்லத்துக்கு அழைத்திருந்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருந்தார். 'கபாலி' படத்தின் சுமார் 20 நிமிடக் காட்சிகளைப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
மலேசியாவில் இன்னும் பல படங்களின் படப்பிடிப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது மரியாதை நிமத்தமான சந்திப்பு மட்டுமே. மலேசிய சுற்றுலா தூதர் பதவி தரவிருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை, வெறும் வதந்தியே' என்று கூறினார்.
மேலும் ரசிகர்களின் நீண்ட கால வேண்டுகோளுக்கு இணங்க ஏப்.11 முதல்16ம் தேதி வரை ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கவுள்ளேன். அதற்கான ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் அரசியல் குறித்த பேச்சு எதுவுமே இல்லை" என்று தெரிவித்தார்.