சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் தனது ரசிகர்களை வரும் 11 முதல் 16ம் தேதி வரை சந்தித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த தகவலை அவரே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தபோது பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது
ஏப்ரல் 12 முதல் 16 வரையிலான இந்த குறுகிய காலகட்டத்தில் ஒவ்வொரு ரசிகர்களுடனும் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை என்று கருதப்படுவதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டம் இருப்பதாகவும், தன்னுடைய நிலையை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது