என்னால நிற்க முடியவில்லை. ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.
ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன்னர் ரஜினி பேசியபோது 'எல்லோருடனும் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மனம் இருந்தாலும் அதிக நேரம் ஆகிற காரணத்தால் நான் உட்கார்ந்து கொள்கிறேன். தயவு செய்து யாரும் தவறாக நினைத்து கொள்ளாமல் என் அருகில் நின்று நீங்கள் போட்டோ எடுத்து கொள்ளுங்கள். மேலும் என்ன செய்தாலும் ஏதாவது குறை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சியில் ஏதாவது குறை இருந்தாலும் அதை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள்
மேலும் ஒருசிலருடன் புகைப்படம் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். அவர்களுடன் வருங்காலத்தில் நிச்சயமாக நேரம் ஒதுக்கி புகைப்படம் எடுத்து கொள்கிறேன்' என்று கூறினார்.