பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் சோ. ரஜினிகாந்த் புகழாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பத்திரிகையாளரும், துக்ளக் ஆசிரியரும், ஜெயலலிதா உள்பட பல அரசியல் பிரபலங்களுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
சோ அவர்களுக்கும் ரஜினிக்கும் மிக நெருக்கமான நட்பு உண்டு. கடந்த 1996ஆம் ஆண்டு திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினியை பேச வைத்தவர் சோ என்று கூறுவதுண்டு.
இந்நிலையில் மறைந்த தனது நண்பரின் உடலுக்கு இன்று காலை ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் நானும் சோவும் நண்பர்களாக இருந்துள்ளோம். பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் அவர். யாருக்கும் பயந்து பேச மாட்டார். அவரது நட்பு வட்டாரம் பெரியது. பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் அவர். அவரது பேச்சுக்கும், எழுத்துக்கும் தேசிய தலைவர்கள் மரியாதை அளித்தனர். சோ ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments