பல ஆண்டுகளாக பல லட்சக் கணக்கானோர் காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த திங்கள் அன்று வாக்களித்தது போலவே இன்று (டிசம்பர் 31) அரசியலுக்கு வருவது குறித்த தன் முடிவை அறிவித்துவிட்டார்.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஒருவாரமாக தன் ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துவரும் ரஜினி ஒவ்வொரு நாளும் ஒரு உரையை நிகழ்த்திவிட்டு புகைப்படங்களை எடுக்கிறார். அப்படி இன்று ஆற்றிய உரையில் அரசியலுக்கு வருவது குறித்த தன் முடிவைத் தெளிவாக அறிவித்துவிட்டார். அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்:
“நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்
அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது”
ஆம். நமது சூப்பர் ஸ்டார் தமிழக அரசியலுக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிடப்போவது உறுதியாகிவிட்டது. இந்த அறிவிப்பு அவரது கோடான கோடி ரசிகர்களையும் தமிழகத்தில அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக்காத்திருந்த பலரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவார் என்றும் வெளிப்படையாக அறிவித்ததார். முதல்வர் பதவியை ஏற்று மக்களுக்கு சேவையாற்றும் தனது உள்ளக் கிடக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக தான் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகவும் உறுதியளித்துள்ளார். .
சினிமாவைப் போலவே அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்ட ரஜினிகாந்துக்கு indiaGlitzசார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.