திமுக தலைவரை சந்தித்த ரஜினிகாந்த்-வைரமுத்து

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரிடமும் நல்ல நட்புடன் உள்ள மிகச்சிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ரஜினிகாந்த் நேற்று தனது நெருக்கமான நண்பரான கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை நேற்று ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் கருணாநிதியின் இன்னொரு நண்பரான வைரமுத்துவும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், வைரமுத்து ஆகிய இருவரையும் கருணாநிதியின் மகனும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவையொட்டி நாளை தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயலலிதா மறைவுக்கு பின் விஜய் எடுத்த அதிரடி முடிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவி சுகம் பெற்று ஒருசிலர் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகிலேயே சிரித்த போஸில் செல்பி எடுத்த கொடிமையை சமூக வலைத்தளங்கள் மூலம் பார்த்தோம்.

தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி-விக்ராந்த் கேரக்டர்கள் என்ன?

சமுத்திரக்கனி நடிக்கவுள்ள 'தொண்டன்' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நாளை ரஜினி ரசிகர்களுக்கு தாணு தரும் 'கபாலி' பரிசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வருக்கு த்ரிஷா அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகினர் பலர் செலுத்தி வந்த நிலையில் இன்று காலை பிரபல நடிகையும், ஜெயலலிதா படித்த அதே சர்ச் பார்க் பள்ளியில் படித்தவருமான த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.

சசிகலா வீட்டில் திடீரென குவிந்த அதிமுக மூத்த நிர்வாகிகள். நடப்பது என்ன?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதல்வர் பணியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டிருக்கும்...