இவர்கள் இருவரும் இணைந்தால் 'அவதார்' சாதனையை முறியடிக்கலாம். அல்போன்ஸ்புத்ரன்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்தது. முதல் பாகம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது பாகமும் வெளியான 4 நாட்களிலேயே ரூ.300 கோடியை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தென்னிந்தியாவை பொருத்தவரைய்யில் ரஜினி படத்தை நெருங்கும் சாதனையை 'பாகுபலி' படம் நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு மிகபெரிய வசூல் சக்கரவர்த்திகள் ஒரு படத்தில் இணைந்தால் அந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும்? என்று கூறுகிறார் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். ரஜினிகாந்த், ராஜமெளலி இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் அந்த படத்தின் வசூல் உலக அளவில் முதல் இடத்தில் உள்ள ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படத்தின் சாதனை பின்னுக்கு தள்ளப்படும் என்று நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 'பாகுபலி' விழா ஒன்றில் ராஜமெளலி கூறியபோது, 'தமிழில் நேரடியாக ஒரு படம் இயக்கினால், அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும் என்றும் அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை' என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சரித்திர வசூல் சாதனை செய்யும் படம் என்று எதிர்பார்க்கப்படும் ரஜினி-ராஜமெளலி படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்