ரஜினி-ஞானவேல் படத்தின் கதை இதுவா? உண்மை சம்பவம் என தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,May 21 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது திரைப்படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேலு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், இந்த படம் ஒரு போலி என்கவுண்டர் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது என்றும் ’ஜெய்பீம்’ படம் போலவே இந்த படத்திலும் ஒரு முக்கியமான சமூக கருத்தும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.