ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? ரசிகர்களுக்கு வந்த ரகசிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,August 04 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்று முழங்கினார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தனது கட்சியின் மாநாடு ஒன்றை திருச்சியில் வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் என்று ரஜினி தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.,
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியபோது, 'போருக்குத் தயாராக இருங்கள் என்று ரஜினி அழைப்பு விடுத்திருந்தார். நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாநாட்டில் ரஜினி வருவார் என்று நம்புகிறோம்' என்று கூறினார்
ஆனால் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதனை மறுத்துள்ளார். திருச்சி மாநாட்டை காந்திய மக்கள் இயக்கம்தான் நடத்துகிறது. அந்த மாநாட்டில் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான் பேச உள்ளேன். இதனால், ரஜினி ரசிகர்கள் அந்த மாநாட்டுக்கு வரலாம். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
எனினும் ரஜினி ரசிகர்கள் இந்த மாநாட்டுக்கு ரஜினி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரஜினி குறிப்பிட்ட போர் வந்துவிட்டதா? என்பது வரும் 20ஆம் தேதி தெரிந்துவிடும்

More News

Youngsters taking virtual world too seriously: Filmmaker Amole Gupte

Filmmaker Amole Gupte, former chairperson of Children's Film Society, India (CFSI), says youngsters are leading a lonely life that drives them to engage with the virtual world. He says it can be dangerous for their future.

Shah Rukh Khan: Never thought my name would become an adjective

A Delhi boy, who once dreamt of becoming an actor, is today regarded as the 'King of Romance' in Indian cinema. Superstar Shah Rukh Khan, who feels his achievements are beyond anyone's dreams, says he never imagined that one day his name will become an "adjective" and that he is not in a delusion about stardom.

Nawazuddin Siddiqui: I represent the majority with dark complexion

During his days as a junior artiste in showbiz, he was told he can't be cast as they would need "extra light" to make him "visible". Nawazuddin Siddiqui, currently one of the most visible actors in the foreign film festival circuit from India, says he feels he represents the country's "majority" with his dark skin.

Oviya Army's warning to Kamal Haasan

From religious and caste outfits, Kamal Haasan has had enough of headache after he started anchoring the Tamil Big Boss reality show But the Ulaganayagan as always never bowed down to the opposition and has been compering the show with his usual zeal and finesse.

What remains to be shot for 'Mersal'?

Thalapathy Vijay has been busy shooting for his 61st film 'Mersal' since February 2017...