ரசிகர் மன்றம் குறித்து ரஜினியின் பரபரப்பு கடிதம்

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் இன்று காலை முதல் அவர் நடிக்கவுள்ள 'காலா கரிகாலன்' திரைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் வெளியான அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் முலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் இந்த கடிதம் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.