close
Choose your channels

'கபாலி'யில் ரஜினிக்கு இரண்டு வேடமா?

Tuesday, December 15, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்டக்கத்தி, மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான டான் வேடத்தில் வெள்ளை நிற தாடியுடன் தோற்றமளிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போதைய கோவா படப்பிடிப்பில் ரஜினியை தாடியை எடுத்துவிட்டு இளமையான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது

ரசிகர் ஒருவர் ரஜினியுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினி ஷேவ் செய்து இளமையான தோற்றத்தில் உள்ளார். இதனால் ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கின்றாரா? அல்லது வயதான டானின் இளமைக்காலத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறதா? என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment