நீதிமன்றங்கள் கெட்டு போனால் நாடு உருப்படாது. ரஜினி பேச்சு

  • IndiaGlitz, [Sunday,September 13 2015]

அரசியல்வாதிகள், பொதுமக்கள் கெட்டுப்போனால் கூட ஒரு நாடு உருப்பட்டுவிடும் ஆனால் நீதிமன்றங்கள் கெட்டு போனால் ஒரு நாடு உருப்படாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசியுள்ளார்.

முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ரஜினிகாந்த், வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது: நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. அரசியல்வாதிகள் கெட்டுப்போனால் நாடு உருப்படும், மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும், ஆனால் நீதிமன்றம் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது. நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில், முதல் தபால் தலையை பெறுவதற்கு, அவருடைய குடும்பத்தில் அதிகம் நெருக்கமானவன் என்ற தகுதியை விட எனக்கு வேறு தகுதி இல்லை.

அவருடைய மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மிகத்தில் பெரும் புலமை பெற்றவர். அவரிடம் எப்படி இதனை பெற்றீர்கள்? என்று ஒரு முறை கேட்டதற்கு, எனக்கு குரு என்னுடைய கணவர் கைலாசம் தான் என்றார். இவரே இவ்வளவு புலமை பெற்றிருக்கும் போது நீதிபதி எவ்வளவு புலமை பெற்றிருப்பார் என்று எண்ணி பார்த்து வியந்து போனேன். பொதுவாக ஞானம் என்ற நிலையை அடையும்போது நான், நீ, நாம், நாங்கள் என்ற வார்த்தைகள் அழிந்துவிடும். எனவே ஆன்மிக வழியில் நாம் ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்' என ரஜினிகாந்த் பேசினார்.

இதே விழாவில் பேசிய கவியரசு வைரமுத்து, "நீதிமன்றம் சமூகத்தை உற்றுப் பார்ப்பது போல், சமூகமும் நீதிமன்றத்தை உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும்.

More News

'தூங்காவனம்' இயக்குனருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த கமல்

கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

திப்புசுல்தான் விவகாரம். ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சி தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'திப்பு சுல்தான்' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும், அதற்கு இந்து முன்னணி...

முடிவுக்கு வந்தது ரஜினியின் ஜோக்கர் புகைப்பட பரபரப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி ...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தேதி?

இந்த வருடத்தில் மட்டும் ஆர்யா நடித்த 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' மற்றும் 'யட்சன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசாகியுள்ளது...

அஜீத் நடிப்பில் 'பாட்ஷா 2'. சுரேஷ்கிருஷ்ணாவின் ஆசை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...