சிவகார்த்திகேயனை தெளிவாக்கிய ரஜினியின் அட்வைஸ்

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் வசூல் சாதனை ஏற்படுத்திய பரபரப்பை விட நன்றி விழாவில் அவர் சிந்திய கண்ணீர் கோலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு சிம்புவும், விஷாலும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க, பல முன்னணி நட்சத்திரங்கள் அவருக்கு போன் மூலம் தங்கள் ஆதரவை தெரிவித்ததோடு, அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் போனில் ரஜினிகாந்த் பேசியதாகவும், இதுபோன்ற பிரச்சனைகளை நினைத்து நினைத்து கவலைப்படாமல் உடனே மறந்துவிட வேண்டும் என்றும் அவ்வாறு மறக்க முடியவில்லை என்றால் குடும்பத்துடன் ஒரு பத்து நாட்களுக்கு வெளிநாடு சென்று திரும்பி வாருங்கள் என்றும் வந்த பின்னர் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் ஆறுதல் சொல்லியதாக கூறப்படுகிறது., ரஜினியின் ஆறுதல் வார்த்தைக்கு பின்னர் சிவகார்த்திகேயன் தற்போது தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது

More News

ஜெயம்ரவியின் 'டிக் டிக் டிக்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில்

'அஜித் 57' படத்தின் முக்கிய பணி முடிந்தது

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது என்பதையும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது...

விஜய், அஜித்துடன் இணைந்தார் மகேஷ்பாபு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் டீசர் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

சந்தானம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் நம்பர் 1 காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்...

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த தெலுங்கு திரையுலக பிரபலம்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டாவது வெற்றிகரமான வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 11ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது...