close
Choose your channels

'கபாலி' பிரிமியர் காட்சி இடம், தேதி, நேரம் அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்

Tuesday, July 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஜூலை 22 அல்லது ஜூலை 29 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் சென்சார் செய்யப்படவுள்ளதாகவும் சென்சாருக்கு பின்னர் ரிலீஸ் தேதியை கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மலேசியாவில் 'கபாலி' படத்தின் பிரிமியர் காட்சி உறுதி செய்யப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஜூலை 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்த படத்தின் பிரிமியர் காட்சி NU CEntral/Mid Valley என்ற திரையரங்கில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த டிக்கெட்டின் விலை 100 மலேசிய ரிங்கிட் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த டிக்கெட்டுக்களின் புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ரிலீஸ் தேதிக்கு முந்தைய நாள்தான் பிரிமியர் காட்சி திரையிடப்படுவது வழக்கம் என்பதால் 'கபாலி' திரைப்படம் ஜூலை 22-ல் ரிலீஸ் ஆவது உறுதி என தெரிகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment