'கபாலி'யால் கிடைத்த லாபம் எவ்வளவு? விரிவான தகவல்

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக சூப்பர் ஹிட் வசூல் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக வசூல் ரூ.70 கோடி என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் வசூலில் 75% தயாரிப்பாளருக்கும், 25% தியேட்டர் உரிமையாளர்களுக்கும் என்ற ஒப்பந்தத்தில்தான் வெளியானது. எனவே இந்த படத்தின் வசூலில் சுமார் ரூ.51 கோடி தயாரிப்பாளருக்கும் மீதி திரையரங்க உரிமையாளர்களுக்கும் கிடைத்துள்ளது.

எம்ஜி ஒப்பந்தத்தின்படி இல்லாமல் 75-25 என்ற ஒப்பந்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள் 'கபாலி' படத்தை திரையிட்ட போதிலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும், எந்திரன்' படத்தை அடுத்து தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படமாக 'கபாலி' அமைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படம் இரண்டாவது வாரத்தையும் தாண்டி நல்ல வசூல் தந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் இந்த படத்தின் வசூல் இன்னும் பல சாதனைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'இருமுகன்' படத்தின் சஸ்பென்ஸ் கதை இதுதானா?

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து....

சிம்பு ரசிகர்களுக்கு இன்று 'தரை மாஸ்' கொண்டாட்டம்

சிம்பு நடிப்பில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

இதுவரை 'கபாலி' செய்த வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக 5000க்கும்...

'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்துடன் ஆரம்பம், ஜீவாவுடன் முடிவு. காஜல் அகர்வால்

தல அஜித் நடிக்கவுள 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும்...