'கபாலி'யின் மூன்றாவது வாரம் சென்னை வசூல்

  • IndiaGlitz, [Monday,August 08 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி வசூலில் உலக அளவில் பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் இதுநாள் வரையிலான வசூல் குறித்த ஒரு தகவலை தற்போது பார்ப்போம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான வார இறுதி நாட்களில் சென்னையில் 'கபாலி' திரைப்படம் 18 திரையரங்க வளாகங்களில் 215 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.70,15,270 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் இந்த படம் வெளியான ஜூன் 22ஆம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் ரூ.11,06,64,060 வசூல் செய்துள்ளது. கடந்த வெள்ளியன்று ஒருசில புதிய படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் 'கபாலி' வசூல் திருப்திகரமாக இருப்பதாகவும், மூன்று வாரங்களில் சென்னையில் மிக அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை 'கபாலி' பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

இன்று நண்பர்கள் தினம்: தமிழ் சினிமாவில் நட்பின் பெருமை குறித்து ஒரு பார்வை

உலகம் முழுவதும் இன்று 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என ஒரு மனிதனுக்கு பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவர்களிடம் சொல்ல முடியாத ஒருசில விஷயங்களை மனம்விட்டு பகிர உதவும் ஒரு புனிதமான உறவுதான் நட்பு.

இயக்குனர் சசிக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வாய்ப்பு

'சொல்லாமலே' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராகிய இயக்குனர் சசி, அதன்பின்னர் 'ரோஜாக்கூட்டம்', டிஷ்யூம், 'பூ', '555' ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும், சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' என்ற ஒரே படம் அவரை முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைத்துள்ளது.

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்?

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2ஆம் தேதி முதல

சிவகார்த்திகேயனின் ரெமோவும் கோவை-மதுரையும்!!!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் கடந்த வாரம் முதல் தொடங்கிவிட்டது

'கபாலி'யின் சீன ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் புதிய வசூல் சாதனை செய்தது.