close
Choose your channels

'பாகுபலி'யின் எந்தெந்த சாதனைகளை 'கபாலி' தகர்த்தது தெரியுமா?

Tuesday, August 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலக அளவில் தென்னிந்திய திரையுலகிற்கு பேரும் புகழும் வாங்கித்தந்த திரைப்படம் என்று கூறுவது மிகையாகாது. இந்த படம் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை முறியடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் இன்னொரு திரைப்படம் வெளிவர பல ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட நிலையில் ஒருசில மாதங்களிலேயே இந்த படத்தின் பல சாதனைகளை சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' வசூல் முறியடித்துள்ளது.
'பாகுபலி'யின் என்னென்ன சாதனைகளை 'கபாலி' தகர்த்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.
1. 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சிகளில் $1,010,555 வசூல் செய்த சாதனையை 'கபாலி' $1.50 மில்லியன் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
2. தென்னிந்திய திரைப்படங்களின் மிகப்பெரிய ஓப்பனிங் படம் என்ற பெருமையை பாகுபலி கடந்த ஆண்டு பெற்றது. இந்த படம் முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்த நிலையில் முதல் நாளில் 'கபாலி' ரூ.87.50 வசூல் செய்து ஒப்பனிங் சாதனையை உடைத்தது.
3. மிக வேகமாக ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த தென்னிந்திய படம் பாகுபலி' இந்த படம் ஐந்தே நாட்களில் ரூ.213 கோடி வசூல் செய்த நிலையில் ரஜினியின் 'கபாலி' மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து இந்த சாதனையையும் முறியடித்தது.
4. வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை 'பாகுபலி' பெற்றிருந்தது. இந்த படம் வெளிநாடுகளில் ரூ.71.30 கோடி வசூல் செய்த நிலையில் 'கபாலி' வெளிநாடுகளில் $10 மில்லியன் வசூல் செய்து சாதனை புரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment