கபாலியின் பிரமாண்ட மலேசிய திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் ஆகியோர் தற்போது அமெரிக்கவுக்கு சென்றுள்ளனர். அங்கு எந்திரன் 2' படம் குறித்து லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் அர்னால்ட் ஆகியோர்களிடம் முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்பியதும் 'எந்திரன் 2' படத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்படும் என்றும் அதன்பின்னர் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தின் கோவா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், வரும் ஜனவரிக்குள் முழு படப்பிடிப்பும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மலேசிய படப்பிடிப்பின்போது ரஜினிக்கு அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பை பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இந்த படத்தை மலேசியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். படப்பிடிப்பிற்கே பேராதரவு கொடுத்த மலேசிய ரசிகர்கள், படத்திற்கு எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout