பரிசுக்கு பதிலாக கொரோனா வைரஸை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா… பரிதாப சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த விழாவின்போது கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்களை கொடுப்பார் என குழந்தைகள் அனைவரும் ஆவலாக காத்து இருப்பர். அதோடு உறவினர்கள் அனைவரும் பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.
இந்நிலையில் பெல்ஜியத்தில் இயங்கி வரும் ஒரு ஆதரவு இல்லத்தில் தங்கி இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சாண்டா கிளாஸை வரவழைத்து ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்ட்வெர்பின் ஹொமல் ரிஜ்க் எனும் பெயர்க்கொண்ட அந்த ஆதரவு இல்லத்திற்கு வந்த சாண்டா கிளாஸ் அங்குள்ளவர்களுக்கு பரிசு பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கி குஷிப் படுத்தினார். இதனால் மன அழுத்ததில் இருந்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் சாண்டா கிளாஸ் ஆதரவு இல்லத்தை விட்டு சென்றவுடன் இல்லத்தில் இருந்து சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாண்டா கிளாஸ் வேடம் அணிந்தவருக்கும் உடல்நல பாதிப்பு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் ஆதரவு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்தச் சோதனையில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 14 பேர் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘
இந்நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தார் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிறந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதே எனவும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout