பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்ய சக்தியா? இதோ வீடியோ!

பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக ஏற்கனவே தனலட்சுமியை அமுதவாணன் பிராங்க் செய்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது உண்மையாகவே அமானுஷ்ய சக்தி இருப்பதாக அமுதவாணன் மற்றும் மைனா ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிபி முத்து, சாந்தி மற்றும் அசல் கோலார் ஆகிய மூவர் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமுதவாணன் ஒரு திகில் கதையை சொல்லிக்கொண்டிருந்த போது உண்மையிலேயே பேய் இருப்பதாக நம்பி தனலட்சுமி கதறி அழுதவாறு வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தார். அவரை சக போட்டியாளர்கள் அது அமுதவாணனின் பிராங்க் என்று கூறி அவரை ஆறுதல் செய்தனர்.

இந்த நிலையில் அமுதவாணன் மற்றும் மைனா ஆகிய இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் இந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது போன்று மைனா தெரிவிக்கின்றார். மேலும் ஸ்டார் எல்லாம் போட்டு எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்கிறார்கள் என்றும் அவர் பயத்துடன் கூறினார். அதனை அமுதவாணன் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

மொத்தத்தில் இதுவும் பிராங்கா? அல்லது உண்மையாகவே பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா? என்பதை வரும் நாட்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.