ஓய்வு முடிவை திடீரென அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீர்ரும், பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றின் மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

இருப்பினும் அவர் ஐபிஎல் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடிய பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்கரரான டிவில்லியர்ஸ் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். இவர் களத்தில் இறங்கிவிட்டால் பந்து மைதானத்தின் நான்கு திசைகளிலும் செல்லும் என்பதால் இவரை மிஸ்டர் 360 என்று இவரது ரசிகர்கள் அன்புடன் அழைப்பதுண்டு. டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

More News

மூச்சுக்காற்றுக்காக போராடிய மக்களின் மூச்சை நிறுத்துவதா? கார்த்தி ஆவேசம்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை குறித்து பார்த்தோம். சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த தமிழ் நடிகை கைது?

தூத்துக்குடியில் நேற்றும் இன்றும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான தமிழக காவல்துறையை கோலிவுட் திரையுலகினர் பலர் கண்டித்துள்ளனர்.

கமல் மீது வழக்கா? காட்டமான விஷால்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு காரணமாக 11 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்,

மீண்டும் துப்பாக்கி சூடு: தூத்துக்குடியில் ஒருவர் பலி

சுற்றுச்சுழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும்

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு: தூத்துகுடி காவல்துறையினர் அதிரடி

தூத்துகுடியில் நடந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 11 பேர் பலியாகினர். பல அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டினால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.