ஓய்வு முடிவை திடீரென அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீர்ரும், பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றின் மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் ஐபிஎல் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடிய பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்கரரான டிவில்லியர்ஸ் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். இவர் களத்தில் இறங்கிவிட்டால் பந்து மைதானத்தின் நான்கு திசைகளிலும் செல்லும் என்பதால் இவரை மிஸ்டர் 360 என்று இவரது ரசிகர்கள் அன்புடன் அழைப்பதுண்டு. டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout