'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர் தீபாவளி கொண்டாடுவதற்கான சென்னை திரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தீபாவளி முடிந்ததும் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஒருசில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை, புதுச்சேரி படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு 160 முதல் 180 நாட்கள் வரை நடைபெற இருப்பதாகவும் முதல் பாக படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸ் ஆன பின்னரே இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 4 கேரக்டர்களில் சூர்யா நடிக்கவுள்ளார். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.