மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை.. ரஜினிக்கு டேக் ஓகே செய்த ஐஸ்வர்யா.. வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Monday,September 18 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக ரஜினிகாந்த் நேற்று தனது பகுதிக்கான டப்பிங் பணிகளை தொடங்கினார். இது குறித்த வீடியோவை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ’மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்’ என்று டப்பிங் பேச அதற்கு ‘டேக் ஓகே’ என்று இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ரஜினிகாந்த் நேற்று ஒரே நாளில் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மற்ற நட்சத்திரங்களை டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Moideenbhai #Lalsalaam
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) September 17, 2023
Thankful grateful blessed 🙏🏼✨ https://t.co/7bjcigJUWP