'நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க'.. சிம்பு பட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

’நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க’.. என சிம்பு படத்தை இயக்க இருக்கும் இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சிம்பு கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சிம்பு படத்தை இயக்க இருப்பதாக தேசிங்கு பெரியசாமி கூறியவுடன்’ வாழ்த்துக்கள் நல்லா பண்ணுங்க, சூப்பரா பண்ணுங்க’ என்று தன்னை வாழ்த்தியதாக தேசிங்கு பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மேலும் சிம்பு இந்த படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தற்போது தனது உடல் நிலையை படத்தின் கதைக்கு ஏற்ப தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் கூறிய கதையில் சிம்பு எந்த விதமான மாற்றமும் சொல்லவில்லை என்றும் அவர் ஒரு இயக்குனர்களுக்கு விருப்பமான நடிகர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தையும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

கேப்டன் பதவியை நீக்க மாயா சொல்லும் குற்றச்சாட்டு.. பதிலடி கொடுத்த நிக்சன்..!.

இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்சன் மீது தகுந்த குற்றச்சாட்டு கூறி அந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், அது மட்டுமின்றி அடுத்த வாரத்திற்கு

விஜயகாந்த் உடல்நிலை நிலவரம்; பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த்

லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு.. அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஐந்து படங்களை மட்டுமே இயக்கிய லோகேஷ் கனகராஜ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது உதவியாளர்களுக்கும்

சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகமா? வைரலாகும் தகவல்கள்..!

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'ஆப்பிரிக்கா காட்டுப்புலி': 'ஆளவந்தான்' படத்தின் இன்னொரு மாஸ் பாடல் ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில்