'நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க'.. சிம்பு பட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

’நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க’.. என சிம்பு படத்தை இயக்க இருக்கும் இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்புவின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சிம்பு கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சிம்பு படத்தை இயக்க இருப்பதாக தேசிங்கு பெரியசாமி கூறியவுடன்’ வாழ்த்துக்கள் நல்லா பண்ணுங்க, சூப்பரா பண்ணுங்க’ என்று தன்னை வாழ்த்தியதாக தேசிங்கு பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மேலும் சிம்பு இந்த படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தற்போது தனது உடல் நிலையை படத்தின் கதைக்கு ஏற்ப தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் கூறிய கதையில் சிம்பு எந்த விதமான மாற்றமும் சொல்லவில்லை என்றும் அவர் ஒரு இயக்குனர்களுக்கு விருப்பமான நடிகர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தையும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.