என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னால் இந்த படத்தில் ஒன்றிப்போக முடிகிறது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திர நகர்கிறது’ என்ற படத்தை பார்த்தபின் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உஙக்ள் இயக்கத்தில் வெளியான படங்களில் மிகவும் சிறந்த படம் ’நட்சத்திரம் நகர்கிறது’ படம் தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் இந்த படத்தை நான் மிகவும் ரசித்தேன்.
குறிப்பாக எனது ஆரம்ப கால நாடக வாழ்க்கையை இந்த படம் எனக்கு ஞாபகப்படுத்தியது. நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப் போக முடிந்தது’ என்று பகிர்ந்துள்ளார்.
இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி கூறிய இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இந்த பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது என்றும் ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை பார்த்துவிட்டு உங்கள் சிறந்த படைப்பு என்று அவர் மேற்கோள் காட்டியதற்கு நன்றி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
I am extremely touched by the appreciation from our #superstar @rajinikanth sir after watching #NatchathiramNagargiradhu
— pa.ranjith (@beemji) September 4, 2022
“This is your best work in terms of direction,writing,casting the performers,art,cinematography,music,so far”are the exact words that he quoted.
Thankyou sir??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com