'ஜிகிர்தண்டா 2' பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இயக்குனர் ஷங்கர், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட பலர் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.
திருவோட கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. சுப்பராயன் சண்டை காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசையமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரோடி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.
இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு எனது தனி பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு யானைகளும் நடித்திருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.
இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க இருக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். கார்த்திக் சுப்புராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனது அன்பான வாழ்த்துக்கள்’ என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
When Thalaivar said....
— karthik subbaraj (@karthiksubbaraj) November 14, 2023
"For my boys" ❤️#JigarthandaDoubleX
Love you Thalaivaaa ❤️❤️ pic.twitter.com/bkNtkedlyU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com