பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Sunday,September 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் மிக அரிதாகவே ஒருசில கருத்துக்களை பதிவு செய்வார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவை வாழ்த்தியும், செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கும், அதே பிரிவில் வெண்கலம் வென்ற வருண்சிங் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே மாரியப்பன் தங்கவேலுக்கு இளையதளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல கோலிவுட் பிரபலங்கள் மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இளையதளபதி வாழ்த்து

கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் அவர்களுக்கும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னவர் நமது இளையதளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.

கேத்ரினா தெரசாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

'கபாலி' இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' சென்சார் தகவல்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'வீரசிவாஜி' ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சூர்யா-35 படத்தில் இணைந்த இரண்டு பிரபல நட்சத்திரங்கள்

சூர்யா தற்போது நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி!!

பிரபல எடிட்டர் மோகன் அவர்களின் இரண்டு புதல்வர்களான ரவி மற்றும் ராஜா ஆகியோர் அறிமுகமான படம் 'ஜெயம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றதால்...