close
Choose your channels

சைதை துரைசாமியை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. மகன் மறைவுக்கு ஆறுதல்..!

Wednesday, February 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் சமீபத்தில் மறைந்த நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் வழங்கி உள்ளார்

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்திற்கு நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்ற நிலையில் அவர் சென்ற கார் சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணி நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சென்னை கொண்டுவரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் நேரில் வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதுமட்டுமின்றி வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அஜித், சைதை துரைசாமி குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதேபோல் விஜய்யும் நேற்று ஆறுதல் கூற சென்றபோது கூட்டம் காரணமாக திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சைதை துரைசாமியை நேரில் சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment