பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்: 'தமிழன்டா' ரஜினிகாந்த் ட்விட்..!
- IndiaGlitz, [Sunday,May 28 2023]
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முக்கோண வடிவில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எம்பிக்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி இடம் ஆதீனங்கள் செங்கோலை ஒப்படைக்க அந்த செங்கோல் சபாநாயகரின் இருக்கை அருகில் வைக்கப்பட்டது. முன்னதாக முன்னதாக செங்கோலை பெற்றவுடன் பிரதமர் மோடி கீழே விழுந்து வணங்கினார்
இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.#தமிழன்டா
— Rajinikanth (@rajinikanth) May 27, 2023
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.