close
Choose your channels

'மாமன்னன்' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த வாரம் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை அடுத்து வசூல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த படத்தை பார்த்து கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள், திருமாவளவன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்து மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment