close
Choose your channels

கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்..

Wednesday, December 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக தமிழக கவர்னர் ரவி, முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல திரை உலக பிரபலங்களும் ஹர்பஜன்சிங் உள்பட பல விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் ரவி-க்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு எடப்பாடி பழனிச்சாமி, திரு ஓ பன்னீர் செல்வம், திரு அண்ணாமலை, திரு சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும்...

நண்பர் திரு கமல்ஹாசன், திரு இளையராஜா, திரு வைரமுத்து, திரு எஸ்பி முத்துராமன், திரு ஷாருக்கான் மற்றும் கலை உலகச் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும்..

திரு சச்சின் டெண்டுல்கர், திரு சுரேஷ் ரெய்னா, திரு ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.. அனைத்து துறை சார்ந்த என்னுடைய நல விரும்பிகளுக்கும்.. நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பு: பொழுதை போக்கும் வறுமையை நீக்கும், உடலினை காக்கும் உழைத்திடுவோம்.. மகிழ்ந்திடுவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment