ஒரே ஒரு கேள்வி தான்: செய்தியாளர் மீது டென்ஷனான ரஜினிகாந்த்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் அவர் டென்ஷனான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது வெளியூர் சென்றாலும், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்பார்கள். அவர் சில கேள்விகளுக்கு பதில் கூறுவது வழக்கமானது.

அந்த வகையில், ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், இன்று விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை கேட்டனர். ’கூலி’ படம் குறித்த கேள்விகளுக்கும், வேட்டையன்’ படம் குறித்த கேள்விகளுக்கும், அவர் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.

இந்த நிலையில், திடீரென ஒரு செய்தியாளர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று செய்திகள் வருகின்றன, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அப்போது டென்ஷன் அடைந்த ரஜினிகாந்த், அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், என்று கூறிவிட்டு, டென்ஷன் உடன் காரை நோக்கி சென்று விட்டார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில், *வேட்டையன்* படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்காகத்தான் ரஜினிகாந்த் சென்னை திரும்பி உள்ளதாகவும், இசை வெளியீட்டு விழா முடிந்ததும் மீண்டும் ’கூலி’ படப்பிடிப்பிற்கு அவர் மீண்டும் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

 

More News

இந்த இரண்டு படங்கள் போல் இருக்கும்: தனுஷின் 'இட்லி கடை' குறித்து தயாரிப்பாளர்..!

தனுஷ் நடிக்க இருக்கும் "இட்லி கடை" என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதோடு, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வைரல் ஆனது.

விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!! தவெக முதல் மாநாடு தேதியை அறிவித்த விஜய்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் புதிய தேதியை

ப்ரியங்கா பற்றி இப்படி பேசுறதுக்கு, மணிமேகலை பொறுப்பு எடுத்துக்கணும்... ரவீந்தர்

தமிழ் நாட்டின் நிகழ்கால பிரச்னைகளைவிட, நடிகர் விஜயின் மாநாடு குறித்த செய்திகளை விட இப்போது தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் அளவிற்கு...

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!

கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,