'காட்ஃபாதர்' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவான ’காட்ஃபாதர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ஒருசில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’காட்ஃபாதர்’ திரைப்படத்தை பார்த்து பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.
’காட்ஃபாதர்’ படத்தை தெலுங்கு மொழியில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவினர்களுக்கு குறிப்பாக இயக்குனர் மோகன் ராஜாவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மிகவும் அற்புதமான படம் என்றும் அருமையான படம் என்றும் அவர் ’காட்ஃபாதர்’ படம் குறித்து கூறியதாக மோகன் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ’காட்ஃபாதர்’ படத்தை பார்த்து பாராட்டிய தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என்றும் தனது வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான்கான் உள்பட பலர் நடித்த ’காட்ஃபாதர்’ திரைப்படம் தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Superstar watched #Godfather ??
— Mohan Raja (@jayam_mohanraja) October 10, 2022
Excellent!! very nice!! very interesting!!! are few of the remarks in his detailed appreciation on the adaptions made for the Telugu version.
Thank u so much Thalaiva @rajinikanth sir, one of the best moments of life.. means a lotttt ?? pic.twitter.com/AFdT7oOoBe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments