விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.. சென்னை திரும்பிய ரஜினி சொன்ன ஒரே ஒரு வார்த்தை..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தொடங்கிய அரசியல் கட்சி குறித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கூறிய ஒரே ஒரு வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

விஜய் அரசியல் கட்சியின் அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி என்றும், அதுவரை தனது கட்சியை தமிழகம் முழுவதும் வளர்க்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள், கருத்து கூறிய நிலையில் இதுவரை ’வேட்டையன்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியபோது அவரிடம் கேட்கப்பட்ட இது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்து உங்கள் கருத்து என்ன? என செய்தியாளர்கள் சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் கேட்டபோது ’விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.