இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது: 'காந்தாரா' குறித்து ரஜினிகாந்த் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 20 கோடி ரூபாய் என்ற நிலையில் இந்த படத்தின் உலகளாவிய வசூல் சுமார் 200 கோடி என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பார்த்து பாராட்டி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
"தெரிந்ததை விட தெரியாதவையே அதிகம் என்பதை சினிமாவில் ‘காந்தாரா’ படத்தை விட வேறு யாரும் இவ்வளவு தெளிவாக காட்டி இருக்க முடியாது. நல்ல சந்தோஷமான தருணத்தை படக்குழுவினர் கொடுத்துள்ளார்கள். எழுத்தாளர், இயக்குநர், மற்றும் நடிகராக ரிஷப் ஷெட்டிக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய சினிமாவின் தலை சிறந்த படைப்பின் பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த வாழ்த்திற்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நீங்கள். சிறுவயதிலிருந்தே உங்களின் ரசிகன் நான். உங்கள் பாராட்டு மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. உள்ளூர் கதைகளை படமாக்க உங்களுடைய இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
“The unknown is more than the known” no one could have said this better in cinema than @hombalefilms #KantaraMovie you gave me goosebumps @shetty_rishab Rishab hats off to you as a writer,director and actor.Congrats to the whole cast and crew of this masterpiece in indian cinema
— Rajinikanth (@rajinikanth) October 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments