இயக்குனர் எப்போதும் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள் தான் தோற்கிறது: 'பீஸ்ட்' குறித்து ரஜினிகாந்த்..!
- IndiaGlitz, [Saturday,July 29 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது சில சுவாரசியமான தகவல்களை தெரிவித்தார்.
கதை சொல்வதற்காக நெல்சன் அவர்களை காலை 10 மணிக்கு வரச் சொல்லி இருந்தேன். ஆனால் அவர் 11 மணிக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் 12 மணிக்கு தான் வந்தார். வந்தவுடன் நான் ஒரு நல்ல காபியா சொல்லுங்க என்று நகைச்சுவையுடன் பேசி அதன் பிறகு கதையை தெரிவித்தார்.
ஒன்லைன் கதையை அவர் கூறியவுடன் எனக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் 'பீஸ்ட்' படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று கிளம்பி சென்றார். அந்த படத்தை முடித்துவிட்டு வந்து முழு கதையும் அவர் சொன்னபோது நூறு மடங்கு சூப்பராக இருந்தது
’ஜெயிலர்’ அறிவிப்புக்கு பின்னர் தான் 'பீஸ்ட்' வெளியானது, நிறைய பேர் 'பீஸ்ட்' தோல்வி அடைந்ததால் நெல்சனுக்கு படம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஆனால் எப்போதுமே ஒரு இயக்குனர் தோற்பதில்லை, அவர் எடுக்கும் சப்ஜெக்ட் தான் தோற்கிறது என்பதில் உறுதியாக இருந்த நான் நெல்சன் தான் அடுத்த பட இயக்குனர் என்பதை உறுதியாக சொல்லிவிட்டேன்.
நெல்சன் மிகவும் நகைச்சுவையாக பேசுவார், ஆனால் வேலை என்று வந்துவிட்டால் ஹிட்லராகவா மாறிவிடுவார், அவருக்கு என்ன தேவையோ அதை வாங்காமல் விடமாட்டார். இந்த படத்தில் பிளாக் காமெடி இருக்கிறது, அதை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. சீரியசான காட்சிகளில் கூட அவர் காமெடி செய்வார்
காவாலா பாடலில் எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருப்பதாக சொல்லி தான் அழைத்துச் சென்றார்கள், ஆனால் எனக்கு இரண்டே ஸ்டெப் கொடுத்துவிட்டு போதும் என்று சொல்லிவிட்டார்கள் என்று கூறினார்
மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அவர் கூறியபோது 'சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே பெரிய பிரச்சனை தான், முதன் முதலில் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கொடுக்கும்போதே வேண்டாம் என்று கூறினேன். ஏனென்றால் அப்போது கமல் பெரிய உயரத்தில் இருந்தார், சிவாஜியும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றால் சரியாக இருக்காது என்று சொன்னேன்.
ஆனால் ரஜினி பயந்து விட்டதாக சொன்னார்கள். நான் பயப்படுவது இரண்டு பேருக்கு தான், ஒன்று கடவுள் இன்னொன்று நல்லவர்கள், மற்றபடி நான் யாருக்கும் பயப்படுவதில்லை' என்று கூறினார்.