சரத்பாபு முன் எப்போதும் இதை செய்ய மாட்டேன்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று சென்னைக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சரத்பாபு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது ’சரத்பாபு எனது மிகவும் நெருங்கிய நண்பர், அவர் என்னுடன் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே முக்கியமானது. குறிப்பாக முத்து, அண்ணாமலை ஆகிய படங்கள் மிக முக்கிய படங்கள்.
என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருந்ததால் அவர் முன் நான் எப்போதும் சிகரெட் பிடிக்க மாட்டேன். சிகரெட் பிடித்து உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம், ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று அவர் சொல்லுவார். அதனால்தான் அவர் முன் நான் சிகரெட் பிடிப்பதில்லை
’அண்ணாமலை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய டயலாக் பேசுவதற்கு 15 டேக் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது எனக்கு சரியாக நடிக்க வராத போது அவர்தான் எனக்கு எமோஷனலாக அழகாக நடித்துக் காட்டினார்’ என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக நேற்று சரத்பாபு மறைவு குறித்த செய்தி வெளியானவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருந்ததாவது: இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments