மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மயில்சாமி நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் மயில்சாமியின் மறைவு குறித்து பேட்டி அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
தமிழ் திரை உலகின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவரான மயில்சாமி நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், கமலஹாசன் ரஜினிகாந்த் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘மயில்சாமியை தனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்றும் அவருடன் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் அவருடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவேன் என்றும் தெரிவித்தார். மயில்சாமிக்கு மிகவும் பிடித்தவர்கள் ஒன்று எம்ஜிஆர் இன்னொன்று சிவன் என்றும் சிவன் கோவிலுக்கு வர தவறாமல் செல்பவர் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் அவரும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது தனக்கு போன் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மயில்சாமி மறைவிற்கு முந்தைய நாள் சிவன் கோயிலில் வழிபட்ட நிலையில் ரஜினிகாந்த் அவர்களை இங்கு வரவழைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டியது தான் தனது விருப்பம் என்று கூறியதாக தெரிவித்தார். மயில்சாமியின் கடைசி ஆசைகுறித்து நிருபர்கள் ரஜினிகாந்திடம் கேட்டபோது கண்டிப்பாக மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் ’சிவராத்திரி அன்று மயில்சாமி இறந்தது தற்செயலாக நடந்தது அல்ல என்றும் அது இறைவனின் கணக்கு என்றும் தீவிர பக்தரை அவருக்கு உகந்த நாளில் சிவன் அழைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தார். நடிகர் விவேக்கை போன்று சமூக அக்கறை கொண்ட மயில்சாமியின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் இழப்பு என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மயில்சாமியின் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் - நடிகர் ரஜினிகாந்த் #Rajinikanth #Mayilsamy #Cinemanews #Malaimurasu @rajinikanth pic.twitter.com/CXMepEXnRB
— Malaimurasu TV (@MalaimurasuTv) February 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments