'விக்ரம்' படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன சொன்னார்? என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் 40 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கும் படக்குழுவினருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’விக்ரம்’ படத்தை பார்த்து கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ’படம் ரொம்ப சூப்பராக உள்ளது’ என வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ’விக்ரம்’ படத்தின் ரிலீசுக்கு ஒரு சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அதை நீங்கள் முழுசா பார்த்திருக்க முடியாது: இடுப்பு டாட்டூ குறித்த கேள்விக்கு ரேஷ்மா பதில்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்த கேள்வி கேட்ட நிலையில் அந்த கேள்விக்கு அவர் பதில் கூறிய தகவல் வெளியாகி உள்ளது. 

'விக்ரம்' படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர் நிர்வாகம்: என்ன காரணம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு முழுமையாக படத்தை ஓட்ட முடியாததால்

'விக்ரம்' ரோலக்ஸ் கேரக்டரை அன்றே கணித்த சூர்யா!

கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற அட்டகாசமான வில்லன் கேரக்டரில் சூர்யா தோன்றி இருப்பார் என்பதும் அந்த ஐந்து நிமிடங்களும் ரசிகர்களுக்கு

'ஏகே 61' படத்தில் இணைந்த 3 நடிகர்கள், அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? முக்கிய தகவல்கள்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை தந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.