திடீரென சன் டிவி அலுவலகம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன காரணம்..?

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகம் சென்றதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்’ . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் சன் டிவியில் நேற்று மாலை ஒளிபரப்பானது என்பதும் இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'ஜெயிலர்’ திரைப்படம் திரையிடுவதற்கு தயாராக உள்ளது என்பதும் சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகம் சென்று 'ஜெயிலர்’ திரைப்படம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 'ஜெயிலர்’ திரைப்படம் முழுவதும் பார்த்து அவர் தன் முழு திருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.