தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. காயமடைந்த தூத்துகுடி நபர் உணர்ச்சிவசம்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார் என்பது தெரிந்ததே. சற்றுமுன்னர் தூத்துகுடி அரசு மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு சிகிச்சை பெற்று வந்த 48 பேர்களையும் தனித்தனியாக சந்தித்து நிவாரண உதவிகளை கொடுத்து ஆறுதல் கூறினார்.

அப்போது காயம் அடைந்த ஒரு தூத்துகுடி நபர் ரஜினியிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

தலைவா, தமிழகமே உங்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தை காப்பாற்றுங்கள். தமிழ்நாடே உங்களை நம்பித்தான் உள்ளது. நீங்கள் எப்போது அரசியலுக்கு வருகின்றீர்களோ அன்றுதான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம். உங்களை நாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராக பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே தலைவர் நீங்கள்தான்.

கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் எங்கள் தலைவர் ஒருவரே' என்று உணர்ச்சிவசப்பட்டு கூற அந்த நபருக்கு ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கினார்.