தன்னை தானே உணர்ந்த மிகப்பெரிய ஞானி பாரதி: ரஜினி புகழாரம்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் பாரதியாரின் சிறப்புகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியவை இதோ:

என்னை பொருத்தவரையில் பாரதியின் தோற்றம் தான் என்னை முதலில் கவர்ந்தது. அவருடைய முண்டாசு மற்றும் முறுக்குமீசை அப்போதே தான் வித்தியாசமானவன் என்பதை உணர்த்தியவர். பாரதி கவிஞர் என்பதை விட ஒரு ஞானி என்றே நான் கூறுவேன். தன்னை தான் உண்ர்ந்த மிகப்பெரிய ஞானி அவருடைய வார்த்தைகள், எழுத்துகள் இன்னும் சாகாவரம் பெற்று விளங்குவதற்கு காரணம் அவை ஒரு ஞானியின் வார்த்தைகள் என்பதால்தான்.

எனக்கு பாரதியாரின் கவிதைகளில் பிடித்தவை 'ஜாதிகள் இல்லையடி பாப்பா, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய இளைஞர்கள் நல்ல வாழ்க்கை முறையை கற்றுக்கொள்ள திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார் ஆகியோர்களின் நூல்களை படித்தாலே போதும். இவ்வாறு ரஜினிகாந்த், பாரதியார் குறித்து கூறியுள்ளார்.

பாரதியாரின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்பதும் ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'மாரி 2' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பீட்டா தெரிவித்த அதிருப்தி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது நீண்டநாள் காதலரும் அமெரிக்காவின் பிரபல பாடகருமான நிக் ஜோன்ஸை கடந்த ஞாயிறு அன்று திருமணம் செய்து கொண்டார்.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் '2.0' செய்த சாதனை

கிராண்ட் ரெக்ஸ் என்ற இந்த திரையரங்கில் ஹாலிவுட் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக வெளியான தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம்

சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்த தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'பேட்ட' சிங்கிள் டிராக் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் அட்டகாசமாக அனிருத் இசையமைத்த 'மரண மாஸ் குத்து பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.