சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிட்டார் யாருக்கு? சீசன் 10 சிறப்பு சுற்று “சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்”
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் 6 முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இந்த மேடை இதுவரை ஏராளமான பாடகர்களை தேர்வுசெய்து அவர்களை இந்த உலகமே திரும்பி பார்க்கும் நிலைக்கு அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் கௌரவமிக்க நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D. இமான் ஆகியோர் உள்ளனர்.
இந்த சீசனில் பங்கேற்று கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பல நெகிழ்வான கதைகள் உள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு இந்த நிகழ்ச்சி சார்ந்த ப்ரோமோ வெளிவந்தது. அதில் ராணிப்பேட்டையில் இருந்து நஸ்ரின் சேலத்தில் இருந்து ரேணுகா கோவையில் இருந்து ப்ரனேஷ் மற்றும் சென்னையில் இருந்து சாரா ஸ்ருதி ஆகியோர்கள் இந்த ஜூனியர் போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் எத்தகைய சவால்களை கடந்து வந்து இதில் பங்கேற்க முடிந்தது என்பதை அழகாக எடுத்து கூறியது பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருக செய்தது. “ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்” என்ற ‘டேக்லைனு’க்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களும் நிறைய. அத்தகைய, திறமைமிக்க குழந்தைகளை இந்த மேடை, இந்த உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து அவர்கள் வெற்றியின் உச்சத்தை அடைய ஒரு சிறு கோலாக உள்ளத்தில் பெருமைகொள்கிறது.
இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பித்து சில வாரங்களே ஆன நிலையில் வரும் டிசம்பர் பன்னிரண்டாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ரவுண்டு இந்த மேடையில் அரங்கேற உள்ளது.
வரும் டிசம்பர் 7, 8, 2024 தேதிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’ ரவுண்டில் குழந்தைகள் சூப்பர் ஸ்டாரின் ‘ஹிட்’ பாடல்களை தேர்வு செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி போட்டியை சந்திக்க உள்ளனர்.
இதில் சிறப்பாக பாடும் ஒரு குழந்தையை தேர்வு செய்து அவருக்கு ஒரு பரிசு அளிக்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே கையெழுத்திட்ட ஒரு கிட்டார் பரிசு காத்திருக்கிறது. அதை வெல்லப்போவது யார் என்பதை வரும் டிசம்பர் 7, 8, சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10ல் கண்டு ரசிக்கலாம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com