சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ரஜினிக்கு உடல் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்க்கு முன் செய்தி வெளியானது. மேலும் அமெரிக்காவில் ரசிகர்களுடன் மற்றும் அமெரிக்க தமிழர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் உடல் பரிசோதனையை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ஒரு நாள் தாமதமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் காரில் ஏறும் காட்சியின் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியதை அடுத்து ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Finally wait is over ??#Annaatthe @rajinikanth pic.twitter.com/UgXvONpRNM
— SRILANKAN RAJINI ?? FANS CLUB (SRFC) (@SrilankaSrfc) July 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com