சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: லதா ஆரத்தி எடுக்கும் வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தான் நடித்துக்கொண்டிருக்கும் ’அண்ணாத்த’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது
இந்த நிலையில் ரஜினி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு உள்பட ’அண்ணாத்த’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை அடுத்து ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருந்து கிளம்பி விமானம் மூலம் சென்னை திரும்பினார்
ரஜினிகாந்த் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் சென்னையில் தனது வீட்டிற்குள் செல்லும்போது அவருக்கு அவரது மனைவி லதா அவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டது உறுதியாகி உள்ளது
இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளில் விரைவில் அவர் விரைவில் ஈடுபடுவார் என்றும் டப்பிங் முடித்தவுடன் அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் உடல் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Welcome Thalaiva @rajinikanth ❤️❤️❤️?? pic.twitter.com/qj9L4CIFuR
— Vanavarayan Rajini (@vanavarayan1212) May 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com