மீனா கணவர் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று காலமான நிலையில் அவரது உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு பெசண்ட் நகர் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனாவின் கணவர் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் மீனாவின் வீட்டிற்கு சென்று வித்யாசாகர் உடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மேலும் சரத்குமார், நிழல்கள் ரவி, குஷ்பூ உள்ளிட்டோர் மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகை மீனா ’முத்து’ ’எஜமான்’ ‘அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வாரிசு' டைட்டில் செய்த மேஜிக்: தயாரிப்பாளர் தில்ராஜூக்கு கிடைத்த ஆண் வாரிசு!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஆண்வாரிசு கிடைத்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு கொடுத்த கெளரவம்: குவியும் வாழ்த்து!

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கார் குழு நிர்வாகம் கொடுத்த கௌரவம் குறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருவதையடுத்து சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீர்கள்: மீனா கணவர் இறப்பு குறித்து குஷ்பு!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமான நிலையில் தயவுசெய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என நடிகை குஷ்பு ஊடகத்தினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின்  ஓடிடி ரிலீஸ் குறித்து

பில்கேட்ஸை சந்தித்த மாஸ் நடிகர்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் உலக பணக்காரர்களில் ஒருவராகிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அவர்களை சந்தித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.